des:தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து கோவையில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகள் சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற பேரணியில் கலவரம் வெடித்ததை அடுத்து, காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.