நாளை திருமணம் நடைபெற இருந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !- வீடியோ

Oneindia Tamil 2018-05-25

Views 4.7K

வயதை விசாரிக்காமல் 18 நிரம்பிய மன பெண்னின் திருமணத்தை நிறுத்திய சைல்டு லைன் அலுவலர்களால் பரப்பரப்பு ஏற்பட்டது

விழுப்புரத்தில் வேணுகோபால் தேவகி ஆகியோரின் மகள் விக்னேஷ்வரிக்கும், புதுார் பூங்குளத்தை சேர்ந்த கருணாகரன் என்பவருக்கும் மேல்மலையனுாரில் திருமணம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் சைல்டு லைன் 1098 மற்றும் சமூகநலத்துறை அலுவலர்கள் வெண்ணிலா சசிகலா ஆகியோர் இரவு பெண்ணின் வீட்டிற்கு சென்று தங்களுக்கு ரகசிய போன் வந்ததாகவும் அதில் 18 வயது பூர்த்தியடையாக விக்னேஷ்வரிக்கு திருமணம் செய்யவுள்ளதாக ஒருவர் தெரிவித்ததாகவும் காவல்துறை உதவியுடன் பெண் மற்றும் பெற்றோரை அழைத்து செல்ல முயன்றனர் .அப்போது பெண் அலுவலர்களோடு உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர் தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்.பி. ஜெயக்குமார் திருமண பெண்ணின் வயது சான்றை சரிபார்த்து விட்டு, பெற்றோரோடு பெண்ணை அனுப்பி வைத்தார்.சான்றிதழை சரியாக பார்க்காமல், திருமண பெண்ணை கூட்டி வந்த அரசு அலுவலர்களுக்கு எஸ்.பி., ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை விட்ட தோடு, குழந்தைகள் நல பாதுகாப்பு கமிட்டி தலைவர் ஜான்போஸ்கோவை விசாரிக்க கோரி காவல்துறைக்கு உத்தரவிட்டார். இந்த சம்பவம் விழுப்புரத்தில் நள்ளிரவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS