தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதைக் கண்டித்து அமெரிக்காவின் மிஸ்ஸோரி நகர தமிழ்ச் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடியில் கடந்த 22ம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில், போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியாகினர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.