Petrol, Diesel prices have been hiked for the 17th consecutive day. People are really sad and upset about the price rise.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 17வது நாளாக இன்றும் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்து வருகிறது. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய்யின் விலை உயர்வுக்கு ஏற்றபடி பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. கடந்த 16 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தினமும் 20 காசு, 30 காசு அதிகரித்து வந்தது.