திருச்சி: மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் திருச்சி மாணவி சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் எனும் நாசகார தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்து கொண்டிருக்கிறது. நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.