இனி வரும் தேர்தல்களில் ஒருபோதும் அதிமுக - பாஜகவை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் இன்று கோவையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், திவாகரன் கட்சி ஆரம்பித்து இருப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.