திருடர்கள் கைது.... போலீஸ் பெயரில் மோசடி....

Oneindia Tamil 2018-06-13

Views 854

போலீஸ் என்று கூறி காரை வழிமறித்து கொள்ளையடித்த கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டை பகுதியில் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த வியாபாரிகளான ஜெகதீஸ் மற்றும் ரமேஷ் ஆகியவரின் காரை வழி மறித்து காவல்துறை என கூறி அந்த இருவரையும் தாக்கி, அவர்களிடம் இருந்தரூ:20 லட்சத்தை கொள்ளையடித்து சென்றதாக கடந்த 8ஆம் தேதி இரவு அரக்கோணம் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் அரக்கோணம் டி.எஸ்.பி குத்தாலிங்கம் தலைமையில் காவல்துறை உஷார் படுத்தப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது நாகாளம்மன் நகர் பகுதியில் சந்தேகம் படும்படியில் வாகனத்தில் வந்த நபர்களை பிடித்து விசாரணை மேற்க்கொண்ட போது பணம் கொள்ளையடித்தது தெரியவந்தது. அவர்களை பிடித்து மேலும் விசாரணை நடத்தியதில் அரக்கோணத்தை சேர்ந்த மகேஷ் மற்றும் திருத்தணியை சேர்ந்த சத்தியா என தெரியவந்தது.. அவர்களிடம் இருந்து கொள்ளை போன ரூ:20 லட்சம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Police have arrested and robbed the robbers who have robbed the car saying they were police.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS