கடலோரம், தெற்கு கர்நாடகா பகுதிகள், அசாம், மேகாலயாவில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமைக்கான வானிலை நிலவரம் பற்றி, இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கனத்த அல்லது மிக கனத்த மழை, கடலோர கர்நாடகா மற்றும் தெற்கு கர்நாடக மாவட்டங்களில் இன்று பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல அசாம், மேகாலயாவிலும், கேரளாவின் சில பகுதிகளிலும், மேற்கு வங்கம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோராம் மற்றும் திரிபுரா மாநிலங்களின் சில பகுதிகளிலும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
Monsoon is expected to remain active over Nagaland, Manipur, Mizoram, Tripura, Meghalaya and parts of Assam that would see moderate to heavy rains since southwest Monsoon has not advanced further during the last 24 hours.