விளைநிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு திண்டலில் ஆர்ப்பாட்டம் நடத்த ஒன்று திரண்ட விவசாயிகளை போலீசார் விரட்டியடித்தனர். தமிழகத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு வழியாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைத்து மின்கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.