தந்தையை கொன்றவனை சிறையில் இருந்தபடி நண்பர்கள் உதவியுடம் மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் இருளாண்டி இவரது மகன் துரைப்பாண்டி இவர்கள் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குக்கள் உள்ளன இந்த நிலையில் துரைப்பாண்டி வழக்கு விசாரனைக்காக அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகி பின்னர் தனது நண்பர் சோலையப்பனுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது பின்னால் காரில் துரத்தி வந்த கும்பல் அவர்களை வழி மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பி சென்றனர் இதில் துரைப்பாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் துரைபாண்டியின் உடலை கைபற்றி பலத்த காயம் அடைந்த சோலையப்பனிடம் விசாரனை நடத்தினர் .விசாரனையில் வில்லாபுரம் பகுதியை சேர்ந்த லெப்ட் முருகன் கொலைக்கு பழிக்கு பழியாக நடந்துள்ளது. என்றும் லெப்ட் முருகன் மகன் பிரகாஷ் தூண்டுதலின் பேரில் கொலை நடந்ததாகவும் தெரியவந்துள்ளது சிறையிலிருந்தவாரே தந்தையை கொன்றவனை நண்பர்களை வைத்து பழிவாங்கியது குறிப்பிடத்தக்கது.