Madurai HM scolds the students for not paying fees. He also says to do murukku business or become cow shepherd.
கல்வி கட்டணம் செலுத்த முடியாவிட்டால் மாடு மேய்க்கவும் முறுக்கு விற்கவும் செல்லுங்கள் என்று தலைமை ஆசிரியர் கண்டபடி பேசுவதாக மதுரை மாணவர்கள் ஆட்சியரிடம் புகார் அளித்தனர். மதுரை ஆட்சியரகத்தில் நேற்று குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் வீரராகவ ராவ் குறைகளை கேட்டறிந்தார். அப்போது உசிலம்பட்டியில் உள்ள எஸ்.டி.ஏ பள்ளி மாணவர்களும் சீருடையில் வந்தனர்.