சேலம் மகளிர் சிறையில் உள்ள வளர்மதி மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார். சேலம்- சென்னை இடையே 8 வழிச்சாலை உருவாக்கப்படவுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.
இதை கண்டித்து விவசாயிகள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வளர்மதி, மன்சூர் அலிகான் ஆகியோர் போராட்டம் நடத்தினர். அப்போது இருவரும் கைது செய்யப்பட்டனர்.