நிலவின் பின்பக்கத்தில் உள்ள பொருட்களை ஆராய்ச்சி செய்ய இந்தியா ரோவர் ஒன்றை அனுப்ப உள்ளது. இதன் மூலம் இஸ்ரோ, புதிய முறையில் மின்சாரம் தயாரிக்கவும் முடிவெடுத்துள்ளது. சூரிய ஒளியை பிரதிபலிக்க முடியாத காரணத்தால் நிலவின் பின்பக்கம் முழுக்க முழுக்க இருளாக இருக்கும். இந்த இருளான பகுதியில் என்ன இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதற்காக இந்தியா களத்தில் இறங்கியுள்ளது. இதன் பின்பக்கத்தில் மிகவும் அதிக அளவில் மின்சார சக்தி அளிக்கும் பொருட்கள் உள்ளது. இப்போது இஸ்ரோ, ஸ்பேஸ் எக்ஸ், நாசா என எல்லோரும் நிலவின் இந்த பகுதியைதான் ஆராய்ச்சி செய்ய இருக்கிறார்கள்.
ISRO plan to a send a rover to research back side of the Moon to create electricity.