ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் தலை, கழுத்து, கைகளில் வெட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
விழுப்பிரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள டி.எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் அப்துல் ஜபார் இவர் தனக்கு சொந்தமான எடப்பாளையம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் இருக்கும் பண்ணை வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் வெகு நேரம் ஆகியும் வீடு விரும்பாததால், அவரது உறவினர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் போனை எடுக்காததால் அச்சம் அடைந்த அருகில் இதுப்பவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் அவர்கள் வந்து பார்த்தபோது இரத்த வெள்ளத்தில் தலை, கழுத்து, கைகளில் வெட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ந்து போயினர்.பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த திருவெண்ணை நல்லூர் போலீசாருக்கு வழக்கு பதிவு செய்து, சடலத்தை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் தகவல் அறிந்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த படுகொலை குறித்து மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்க பட உள்ளதாக கூறப்படுகிறது.