மின் நிறுத்த நாளில் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட மின்சார ஊழியர் மின்சாரம் தாக்கி பலியானதால் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்
தேனி மாவட்டம் மார்க்கையன்கோட்டை துணை மின்நிலையத்தின் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிக்கு காலை 9.45.மணி முதல் 4.45 வரை மின் நிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் மின் வாரிய ஊழியரான பெருமாள் அவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதியான தனது சொந்த ஊரான பல்லவராயன்பட்டியில் மின் மாற்றியில் பராமரிப்பு பணிக்காக அனுமதி பெற்று மின் மாற்றியில் வேலை செய்து கொண்டு இருந்தார்.அப்போது திடீர் என்று மதியம் 1.00 அளவில் எதிர்பாரதவிதமாக அந்த பகுதியில் மின்சாரம் 5 நிமிடம் வந்துசென்றுள்ளது. தீடீர் என்று வந்த மின்சாரம் பெருமாளை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தார்.வெகு நேரம் ஆகியும் மின்சாரத்துறை அதிகாரிகள் யாரும் இறந்த பெருமாளை காண வரவில்லை என ஆத்திரம் அடைந்த பெருமாளின் உறவினர்கள் டி.சிந்தலைச்சேரியில் போடி செல்லும் பிரதானச்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.