நூற்பாலைக்கு பணியாளர்களை ஏற்றி சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் 3 பெண்கள் உயிரிழந்த்தனர் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்
திருப்பூர் தாராபுரம் பகுதியில் தனியார் நூற்பாலைக்கு பணியாளர்களை ஏற்றிக்கொண்டு பழனி நோக்கி சென்று கொண்டிருந்தது அப்போது திடிரென ஒட்டுனரின் கட்டுபட்டாடை இழந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வேனில் இருந்த மூன்று பெண்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் . 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததுடன் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்