ஒருவரை குழந்தை கடத்துபவர் என சந்தேகிப்பதுடன், அவரை என்ன ஏதென்று கூட விசாரிக்காமல் பலபேர் சேர்ந்து கொண்டு வரிந்து கட்டிக் கொண்டு அடிக்க வரும் பழக்கம் எல்லா இடங்களிலும் இருக்கும் போல. கர்நாடக மாநிலம் மங்களூரில் உச்சிரே என்னுமிடத்தில் வசித்து வருபவர் கலீத்.
இவருக்கு வயது 30. திருமணமாகி 2 வயது குழந்தை உள்ளது. இவர் தனது குழந்தையுடன் ஆட்டோவில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார்.