முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கு அரிசி வழங்காத அவல நிலை- வீடியோ

Oneindia Tamil 2018-07-12

Views 1.3K

முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கு கடந்த ஒருவருட காலமாக அரிசி வழங்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது

வேலூர் ஆற்காடு வட்டத்திற்குட்பட்ட தோணிமேடு,இரும்பூர்,தட்டச்சேரி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வயதானோர் முதியோர் உதவித்தொகை பெற்று வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த ஆண்டு குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற விதிமுறையின் படி பலர் தங்களது அரிசி அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க முயற்சித்துள்ளனர்.ஆனால் அந்தந்த ரேஷன் கடைகளில் உள்ள ஊழியர்களின் அலட்சியத்தால் சிலருக்கு ஒருவருட காலமாக அரிசி கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது.ஆதார் அட்டையை இணைக்குமாறு ஊழியர்களிடம் முறையிட்டு ஆதாரினை கொடுத்தாலும் அதனை இணைக்காமல் ஊழியர்கள் அலைக்கழிப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.இந்த நிலையில் ஆற்காடு வட்டாச்சியர் அலுவலகத்தை முதியவர்கள் முற்றுகையிட்டு தாசில்தார் சுமதியிடம் மனு அளிக்க 50க்கும் மேற்பட்ட முதியவர்கள் வந்த போது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அரிசி வழங்க வழிவகை செய்து தரப்படும் என்று உறுதியளித்தார்.

des: For the past one year, there is a risk of rice for the elderly scholars

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS