போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி இருந்த சத்ரூஜியை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுவையில் போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் இது வரை 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்துருஜி கடந்த இரண்டு மாதமாக போலீசாரின் கையில் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்துள்ளார். அவரை சென்னை போலீசார் பிடித்து புதுவை போலீசாரிடம் ஒப்படைத்தனர். சந்துருஜி போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் ஜப்பான், சவுதிஅரேபியா, ஸ்வீடன் இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தன் கைவரிசையை காட்டியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. புதுவை போலீசார் சத்குருஜியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
des: Police have arrested Satrauli, who was fraudulently faked with fake ATM cards.