திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்ட போது கணக்கில் வராத பணம் சிக்கியது.
ஓட்டுனர் உரிமம் வாகன சான்று உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வருகின்றனர். அவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ஆர்டிஓ அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத ஆயிரக்கணக்கான ரூபாய்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் ஆர்டிஓ மற்றும் அலுவலக பணியாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
des: Money from the Tiruvannamalai Regional Transport Office