சென்னையில் சாலையில் நடந்து சென்றவர்களிடம் தொடர் வழிபறியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலையை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவர் இரு தினங்கள் முன்பு சென்னை திருவள்ளிக்கேணி பகுதியில் உள்ள கலைவாணர் அரங்கம் அருகே தனது செல்போனில் பேசிய படி சாலையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த மர்ம நபர் ஒருவர் கோவிந்தராஜன் கையில் இருந்த செல்போனை பறித்து சென்றுள்ளார். இதனை தொடர்ந்து செல்போன் பறித்து சென்ற இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை திருவல்லிக்கேனி காவல் நிலையில் கோவிந்தராஜன் கொடுத்துள்ளார். இது தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் விஜய் தலைமையில் குற்றப்பிரிவு காவலர்கள் நடத்திய விசாரணையில் சிராஜு என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து இரு சக்கர வாகனம் மற்றும் ஏராளமான செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் பல்வேறு குற்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV