பீஹாரில் 42 ஆயிரம் பத்தாம் வகுப்பு விடைத்தாள் மாயமான சம்பவத்தில் பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பீஹாரில் அரசு தேர்வு வாரியத்தின் சார்பில் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 1,426 மையங்களில், கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி துவங்கி 28-ல் முடிந்தன. 17 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவகள் தேர்வு எழுதினர். விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு திருத்தும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, வரும் ஜூன் 26-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள இரண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள தேர்வு மையத்திற்கு, கல்வி அதிகாரிகள் ஆய்வுக்காக வந்தனர். அப்போது 42 ஆயிரத்து 500 விடைத்தாள்கள் மாயமானது தெரியவந்தது. இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசாரின் விசாரணையில் கடந்த வாரம் இரவு பள்ளியின் பியூன் உதவியுடன் வேனில் கட்டுகட்டுட்டாக, வேஸ்ட் பேப்பர் கட்டுகளுடன் 10-ம் வகுப்பு விடைத்தாள்களும் வேனில் கொண்டு செல்லப்பட்டதும், அவை 8 ஆயிரத்து 500-க்கு எடைக்கு போட்டப்பட்டதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார், பள்ளி முதல்வர், பியூன் உள்பட மூவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV