தனது ஜம்மு பயணத்தின் போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்த அமித்ஷாவுக்கு, ஆட்சியிலிருந்த இத்தனை நாட்கள் என்ன செய்தீர்கள்? என அக்கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
காஷ்மீர் மக்கள் இந்தியாவிடம் இருந்து விடுதலையையே விரும்புகிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் காஷ்மீர் மாநில மூத்த தலைவரான சைபுதீன் சோஸ் சமீபத்தில் பேசியிருந்தார். ஜம்மு சென்றிருந்த பாஜக தலைவர் அமித்ஷா, இதனை வைத்து காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, தேசியம் குறித்தும் தேச நலன் குறித்தும் காங்கிரசுக்கு உபதேசம் செய்ய தகுதி அமித்ஷாவுக்கு இல்லை என்று கூறினார். ஜம்மு - காஷ்மீரை இந்தியாவுடன் ஒருங்கிணைத்ததில் பெரும் பங்கும் காங்கிரசுக்கே உண்டு என்றும் உண்மை நிலை இப்படியிருக்க அமித்ஷாவோ தவறான தகவல்களைத் தெரிவித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த மாநிலத்தில் இத்தனை நாள்களாக ஆட்சி நடத்தியபோதும் மக்கள் நலனுக்காக பாஜக எதுவுமே செய்யவில்லை என்றும் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV