மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த பிப்ரவரி 21 -ஆம் தேதி மதுரையில் கமல்ஹாசன் தொடங்கினார். அன்றைய தினமே கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினர்களையும் அவர் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து, கட்சிக்கு அரசியல் கட்சி என்ற அங்கீகாரத்தையும் தற்போது கமல்ஹாசன் பெற்றுள்ளார். இந்நிலையில், கட்சியின் கொள்கைகளை விளக்கும் பாடல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவுக்கு கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையேற்று, பாடல்களை வெளியிட்டு சிறப்புரையாற்ற உள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், நாட்டு நடப்புகளில் மக்கள் நீதி மய்யத்தின் பார்வை ஆகிய கருத்துக்கள் அடங்கிய 6 பாடல்கள் இந்த விழாவில் வெளியிடப்பட உள்ளன. இந்தப் பாடல்களை கட்சியின் செய்தித் தொடர்பாளரான கவிஞர் சினேகன் எழுதியுள்ளார். இந்தப் பாடல்களுக்கு தாஜ்நூர் இசையமைத்துள்ளார்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV