திருச்சி விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாக கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 35 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த விமான பயணிகளிடம் சோதனை மேற்கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள், சென்னையைச் சேர்ந்த மகரூப் என்பவரிடம் இருந்து 8.9 லட்சம் மதிப்பிலான, 290 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். சென்னையைச் சேர்ந்த மற்றொரு நபர் அமீன் என்பவரிடமிருந்து 11 லட்சம் மதிப்பிலான 360 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் நேற்றிரவு கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் சென்னையை சேர்ந்த அப்துல் சமத் என்பவர், குளிர்சாதன அடாப்டரில் மறைத்து எடுத்து வந்த 13.5 லட்சம் மதிப்புள்ள 440 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பிறமுதல் செய்தனர்.
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV