அயர்லாந்து-இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 கிரிக்கெட் போட்டி டப்ளின் நகரில் நேற்று நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள்களை எடுத்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 97, தவான் 74 ரன்கள் குவித்தனர். இதனையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி, ஆட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே இந்திய பந்து வீச்சில் தடுமாறியது. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து அயர்லாந்து அணி தோல்வியை தழுவியது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசி, 4 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV