அரியலூர் அருகேயுள்ள வாரணாசி கிராமத்தில், பேருந்தில் செல்வதற்காக பேருந்து நிழற்குடைக்குள் பயணிகள் நின்று கொண்டிருந்தனர். அப்போது திருமானூர் நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிழற்குடைக்குள் புகுந்தது. இதில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த மருதமுத்து, இளங்கோவன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ க்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV