சென்னை, சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத் தலைவர் சுப்ரமணியன், 26 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் நேற்று ஒருநாள் வேலை நிறுத்தம் நடைபெற்றதாக தெரிவித்தார். இதனிடையே தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால் , பேச்சுவார்த்தையில் எந்தவித உத்திரவாதமும் அரசு வழங்காத நிலையில், தங்களின் வேலை நிறுத்தம் தொடரும் எனவும், வருகின்ற 5ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார். தங்கள் கோரிக்கைகளை சட்டபேரவையில் 110 விதியின் கீழ் அனைத்து ஆணைகளும் தமிழக முதல்வர் பிறப்பித்தால் மட்டுமே, தங்களுடைய போராட்டம் வாபஸ் பெரும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்று தெரிவித்தார்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV