மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நியூட்ரினோ எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலனை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை போல் காவல்துறையை பயன்படுத்தி உருவாக்கி இருப்பதாக குற்றம்சாட்டினார். தமிழர் உரிமைக்காக போராடும் தமிழ் அமைப்பை தடை செய்து விடலாம் என மத்திய அரசு நினைப்பது நெருப்போடு விளையாடுவது போன்றது என்றார். 8 வழிச்சாலை அமைப்பது குறித்து கேட்பவர்கள் மீது குண்டர் சட்டத்தினை போட தமிழக அரசு நினைப்பதாகவும், இது அப்பட்டமான ஜனநாயக உரிமை மீறல் என்றார். தனி அமைப்பையோ, தனி நபரையோ அரசு நசுக்க முற்பட்டால் திமுக, கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட தோழமை கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV