சென்னை மைலாப்பூரில் மறக்க முடியுமா தூத்துக்குடியை என்ற தலைப்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மக்களின் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் பிரகாஷ் ராஜ், வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன், வழக்கறிஞர் அருள்மொழி, மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், ரியல் எஸ்டேட் போல தமிழக அரசியல் மாறி வருவதாக விமர்சித்தார். மேலும், அனைத்து கட்சிகளும் ஒரே மாதிரியானது தான் என்று கூறிய அவர், அவர்களுக்கு எதிராக அனைவரும் சேர்ந்து நிற்கும் நேரம் வரும் என கூறினார்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV