கூடங்குளம் முதலாவது அணுலையில் கடந்த 28-ம் தேதி பராமரிப்பு பணிக்காக 1000 மெகாவாட் மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பராமரிப்பு பணிகள் முடிந்து இன்று அதிகாலை மீண்டும் மின்னுற்பத்தி துவங்கியது. முதல் கட்டமாக 300 மெகாவாட் மின்னுற்பத்தி நடைபெற்று வருகிறது. படிப்படியாக மின்னுற்பத்தி அதிகரிக்கப்பட்டு 3 அல்லது 4 நாட்களில் 1000 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்படும் என்று அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 2 வது அணுஉலை கடந்த பிப்ரவரி மாதம் 19 ந்தேதி முதல் பழுது காரணமாக மின்னுற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV