யோகேஸ்வரி - சாதனை மாணவி
இது குறித்து கூறும் யோகேஸ்வரியின் அறிவியல் ஆசிரியை, ஒவ்வொரு வருடமும் அறிவியல் தங்கள் பள்ளியின் சார்பாக அரசு நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் நிகழ்ச்சியில் பங்கேற்பதாகவும். அதேபோல இந்த ஆண்டு யோகேஸ்வரி பங்கு பெற்று மாநில அளவில் பரிசு பெற்றது தங்களுக்கும் தங்கள் பள்ளிக்கும் பெருமை அளிப்பதாகவும் கூறினார்.
¤: சுதா - அறிவியல் ஆசிரியை
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு தகுந்தார் போல் சிறு வயதிலேயே சாதித்து காட்டியுள்ள மாணவி யோகேஸ்வரிக்கு பள்ளி ஆசிரியர்களும், குடும்பத்தாரும் தங்களது பாராட்டுகளை தெரிவிக்கின்ற்னர். அந்த வகையில் சத்தியம் தொலைக்காட்சியும் மாணவியின் சாதனைக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.
சத்தியம் செய்திகளுக்காக திருப்பூர் மாவட்ட செய்தியாளர் ஜெர்ரியுடன் செய்திக்குழு......
இது குறித்து கூறும் யோகேஸ்வரி, கடந்த சில மாதங்களாக சுற்றுச்சூழல் தொடர்ந்து மாசுபட்டு வருகிறது.அது மட்டும் இன்றி தற்போது உள்ள சூழ்நிலையில் தினம் ஒரு விலை என பெட்ரோல் டீசல் நிலைமை கானப்படுகிறது. எனவே வரும் காலங்களில் இந்த பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் தட்டுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே உலகின் அதிகபரப்பளவில் விரிந்துள்ள கடல் நீரை பயன் படுத்தி அதில் உள்ள நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன் வாயுகளை பிரித்து எடுத்து அதன் மூலம் வாகனங்களை இயக்கலாம் என்றும் அதன் மூலம் 100% சுற்றுச்சூழல் மாசுபடாது என்றும் கூறுகிறார். இதன் மூலம் சுமார் ஒரு லிட்டர் உப்பு தண்ணீரை பயன் படுத்தி சுமார் 35 முதல் 40 கி.மீ மைலேஜ் கிடைக்கும் என்றார். நான்கு முறை இதில் தோல்வி கண்டாலும் பிறகு தொடர்ந்து உழைத்தன் பயனாக ஜந்தாம் முறையில் சாதித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்த ஆராய்ச்சி வெற்றி அடைந்ததற்கு தனது குடும்பத்தினருக்கும், ஆசிரியருக்கும், பள்ளிக்கும் நன்றி தெரிவிக்கின்றார்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV