சிவகங்கை மாவட்டம் கீழச்செவல்பட்டி அருகே உள்ள அச்சரம்பட்டியை சேர்ந்தவர் அழகு. இவரின் 17 வயது வாய் பேச முடியாத மகள் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மாணிக்கம் என்ற காமக்கொடூரன், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பின்னர் சிறுமி தன்னை அடையாளம் காட்டி விடுவார் என்ற பயத்தில் சிறுமியை கொலை செய்து உடலை காட்டுப்பகுதிய்ல் போட்டுவிட்டு தப்பியோடியுள்ளான். சிறுமியின் கொலை குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் ராமநாதபுரம் சரக DIG காமினி மற்றும் எஸ்.பி ஜெயச்சந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த தனிப்படை போலீசார், மாணிக்கம் என்ற காமக்கொடூரனை கைது செய்தனர்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV