புனித அந்தோணியர் ஆலய தேர் திருவிழா- வீடியோ

Oneindia Tamil 2018-07-24

Views 619

தாராபுரத்தில் பிரசிதிப் பெற்ற புனித அந்தோணியர் ஆலயத்தின் தேர் திருவிழா-முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி பக்தர்கள் கொண்டாட்டம்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரசிதி பெற்ற புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா திருப்பலி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. இத்திருவிழாவின் சிகரம் தொடும் நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி இன்று இரவில் நடைபெற்றது.இதையொட்டி மலர்களாலும், வண்ண மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டு பவனி நடைபெற்றது. பேண்டு வாத்தியம் முழங்க, பாடல் குழுவினர் புனித அந்தோணியாரை வாழ்த்தி பாடல் பாடியபடி தாராபுரம் முக்கிய வீதி வழியாக சென்றனர். புனித அந்தோணியாரின் திருத்தலத்தில் தொடங்கி முக்கிய வீதிவழியாக தாலுக்கா அலுவலகம் சாலை, பெரிய கடை வீதி , பூக்கடைகார்னர் , N.N. பேட்டை வீதி போன்ற முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து மீண்டும் திருத்தலத்தை வந்தடைந்தது. பிறகு 10 மணிக்கு திருவிழா திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Des : Chariot Bhavani celebration is celebrated by the Chariot Festival of the St. Anthony Temple in Tharappuram.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS