கடைக்குட்டி சிங்கம் வெற்றிவிழாவில் விவசாயத்தில் சாதனை படைத்த 5 பேருக்கு தலா ரூ. 2 லட்சமும், தமிழக விவசாயிகளின் நலத்திட்டங்களுக்காக ரூ.1 கோடியும் வழங்கப்பட்டது.
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் கடைக்குட்டி சிங்கம். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த 13ம் தேதி ரிலீசான இப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விவசாயம், ஆணவக் கொலை மற்றும் குடும்ப உறவுகள் பற்றி பேசியுள்ள இப்படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அரங்கம் நிறைந்த காட்சிகளாக இப்படம் திரையரங்குகளில் ஓடி வருகிறது.
Actor Surya today gave Rs One crore to farmer development in Kadaikutty singam successmeet function.