மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக மூத்த நிர்வாகி இல.கணேசன் தலைமையில் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, முன்னதாக இல.கணேசன் செய்தியாளர்களை சந்தித்த அவர் தி.முக. செயல் தலைவர் ஸ்டாலின் மக்களின் பிரச்சனைக்காக போராடாமல் இருப்பதில் வல்லவர் என்றார். ஸ்டாலின் உட்பட திமுகவினர் ஆளுனர் மீதான நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு தெளிவு பெற வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையின் பாதிப்பால் நிலத்தடி நீர்மட்டம் ஆய்வு செய்வது போல, தோல் தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளிலும் தமிழக அரசு ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். காவிரி நீர் கரைபுரண்டு ஓடும் நிலையில், காவிரி நீருக்காக விவசாயி என்ற போர்வையில் போராட்டம் நடத்தியவர்களில் தற்போது எத்தனைப் பேர் தற்போது நிலத்தில் இறங்கி விவசாயம் செய்து வருகின்றனர் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Des : A senior consultant led by senior BJP leader N Gonzalez in the private wedding hall at Melur in Madurai district held a meeting of the Conference meeting held earlier. Executive Chairman Stalin said he was the one who could not fight for the problem of the people.