குடியாத்தம் பகுதியில் பள்ளி மாணவி சாலை விபத்தில் பலி- வீடியோ

Oneindia Tamil 2018-07-27

Views 1.3K

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தங்கம் நகர் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் உமாசங்கர் என்பவரின் மகள் காவ்யஸ்ரீ குடியாத்தத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார் இன்று மாலை வேறு தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சந்தீப் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிகொண்டாவில் இருந்து குடியாத்தம் நோக்கி வரும்போது வேப்பூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் காவியாஸ்ரீ நிலைதடுமாறி சாலையில் விழுந்தார் இதில் காவ்யாஸ்ரீ தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் உடன் வந்த சந்திப் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார் தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த குடியாத்தம் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் பள்ளி மாணவி சாலை விபத்தில் மரணமடைந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Des: The school student of the Gudiyatham area killed the road accident

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS