கலைஞருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டால் அதனை கேட்டால் தமிழக அரசு தயாராக உள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
கட்டிட திறப்பு விழா, புதிய திட்ட பணிகள் துவக்க விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சேலம் வந்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று பயணியர் மாளிகையில் அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார், முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். கலைஞருக்கு காவிரி மருத்துவ மனையில் தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. உடல் நிலையில் முன்னேற்றம் உள்ளது. முன்னாள் முதல்வர், தற்போதைய சட்ட மன்ற உறுப்பினராக உள்ளவர் இதுவரை அவர்கள் எந்த உதவியும் கோரவில்லை, மருத்துவ உதவி தேவைப்பட்டால் அதனை கேட்டால் தமிழக அரசு தயாராக உள்ளது என்றார்