தி.மு.க. தலைவர் கருணாநிதி பூரண உடல்நலம் பெற்று தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் பணியாற்ற வேண்டும். என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்
விழுப்புரத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க 12&வது மாநில மாநாட்டையொட்டி ஆலோசனை கூட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு பேசினார். தி.மு.க. தலைவர் முத்தமிழ் அறிஞர் என்று போற்றக்கூடிய கருணாநிதி, ஓராண்டு காலமாக உடல்நலம் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே மருத்துவ சிகிச்சை பெற்றார். கடந்த 2 நாட்களாக அவருக்கு சற்று காய்ச்சல் அதிகமாகியிருக்கிறது. அவர் பூரண உடல்நலம் பெற்று தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் பணியாற்ற வேண்டும். என்றும் தெரிவித்துள்ளார்
Des : DMK Chief Karunanidhi should have full health and work for Tamil Nadu and Tamil people. Said Mutharasan, State Secretary of the Communist Party of India