வேலூர்மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட ராஜவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது இப்பள்ளியில் 49 மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையில் ஒரே ஆசிரியையும் தலைமை ஆசிரியையுமான இந்திரா கிராமப்புறம் மற்றும் மலைகிராம மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சிறந்த முறையில் கல்வி விளையாட்டு பொது அறிவு என பயிற்சியளித்து வந்தார் இதனால் இப்பள்ளிக்கு பல்வேறு விருதுகளும் பாராட்டுகளும் கிடைத்ததுடன் பள்ளியில் தொடர்ந்து மாணவர்களின் கல்வியறிவும் மேம்பட்டு வருகிறது இந்த நிலையில் 5 ஆம் வகுப்பு வரைமட்டுமே உள்ள இந்த துவக்கப்பள்ளியில் 11 மாணவர்கள் தங்களின் படிப்பை முடித்து 6 ஆம் வகுப்பில் சேர வேறு பள்ளிக்கு சென்றனர். ஆனால் தங்களின் ஆசிரியரும் தலைமை ஆசிரியையுமான இந்திராவை விட்டு பிரிய மனமில்லாமல் கதறி அழுத காட்சி காண்போரை கரையவைத்தது இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில் நல்ல முறையில் கல்வியை போதித்த இப்பள்ளியில் தொடர்ந்து 12 ஆம் வகுப்பு வரை மேம்படுத்த நடவடிக்கை எடுத்திருந்ததால் இங்கேயே கல்வியை பயின்றிருப்போம் ஆனால் நல்ல கல்வியை ஒழுக்கத்தையும் அளித்த தலைமை ஆசிரியை இந்திராவை விட்டு பிரிய மனமில்லாமல் மனவேதனையுடன் பிரிந்து செல்வதாக கூறினார்கள்
Des : The Rajavoor Panchayat Union Primary School in Kandali Union has 49 students in the school.