திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையடுத்து நாளை நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும், தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். மத்திய அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி சென்னையில் இன்று மாலை உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழக அரசு ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்திருந்தது.
nationwide mourning tomorrow on karunanidhi death