இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ள கேரளாவுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும், கேரளாவுக்கு நிதி அளிக்க தனியாக முதலமைச்சர் நிவாரண நிதி கணக்கு தொடங்கப்படும் எனவும் கூறினார். பொதுமக்கள், வியாபாரிகளிடம் நிதி திரட்டி கேரளாவுக்கு அனுப்பப்படும் என்றும் நாரயாணசாமி தெரிவித்தார்.