ஈரோடு கருங்கல்பாளையத்தில் காவிரி கரையோரங்களில் உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை செய்ய ஆட்டோ மூலம் மைக் கட்டி அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.
இதே பகுதியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகர் காவிரி ஆற்றின் கரையோரத்தில் ஆய்வு மேற்கொண்டு கரையோர மக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தினர். மேலும் காவிரி ஆற்றின் கரையோரத்தில் ஈரோடு தாசில்தார் அமுதா உள்ளிட்ட வருவாய்துறை - உள்ளாட்சி துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள ஆலேசனை வழங்க வழங்கினார். இதனையடுத்து பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர்...
தற்போது மேட்டூர் அணையில் தறந்துவிடப்பட்ட 1 லட்சத்து 35 ஆயிரம் கன நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்ப்பட்டு அதிகளவு காவிரி ஆற்றில் செல்லக்கூடிய காரணத்தினால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்
Des : Mike has been instructed by the auto to flood the Cauvery coastal areas in Erode Karungalpalayam.