மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் மறைவையொட்டி, நேற்று சென்னை காமராஜர் அரங்கத்தில் தமிழ் திரையுலகினர் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய நடிகர் ரஜினிகாந்த், கருணாநிதியின் இறுதி சடங்கில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். இதற்கு, பதிலடியாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அரசியல் வரலாறு தெரியாதவர் நடிகர் ரஜினிகாந்த் என கடுமையாக விமர்சித்தார்.