மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் கூத்தம்பட்டி, கந்தன் பட்டறை, நேதாஜி நகர், அரிசி மார்கெட் காவேரி வீதி பகுதிகளில் சுமார் ஆயிரம் வீடுகள் தண்ணீரினால் சூழ்துள்ளது. அப்பகுதியில் வசித்தவர்கள் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதே போல பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் தற்போது 57 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் சத்தியமங்கலம் கோவில் படித்துறை, அத்தாணி, மற்றும் பவானியில் சோமசுந்தரபுரம், சீனிவாசபுரம் பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. பவானி ஆற்றில் ஆகாய தாமரைகள் பரவி பாலத்தின் கண்களில் அடைத்து கொண்டதால் தண்ணீர் செல்ல முடியாமல் ஊருக்குள் புகுந்தது. இதனால் காலையில் பழைய பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தி பக்கவாட்டு சுவர்களை இடித்து பொக்லைன் இயந்திரம் மூலம் ஆகாய தாமரைகள் அகற்றப்பட்டது. அதன் பின்னர் தண்ணீர் வடிய துவங்கியது. பவானி பழைய பாலம் பூக் கடை பாலம் ஆகியவற்றில் போக்குவரத்து பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
Nearly 2,000 cubic feet of water from Mettur Dam is being evacuated by Kondampatti, Kanthan Workshop, Netaji Nagar and Rice Market Cauvery Road areas around 1,000 homes.