அமெரிக்காவில் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் நேற்று ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு

Sathiyam TV 2018-08-27

Views 1

சிகாகோ புறநகர் பகுதியான Little Village பகுதியின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. முதலில் இரண்டு வீடுகளில் பற்றிய தீ மளமளவென பரவ தொடங்கியது. இந்த தீ விபத்தில் சிக்கி 6 குழந்தைகள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS