பூசாரி தலை முடியை வெட்டிய ஊர் பஞ்சாயத்தார்- வீடியோ

Oneindia Tamil 2018-09-01

Views 560

அரசாங்க கழிப்பிடம் வராததற்கு காரணம் பூசாரிதான் எனக்கூறி பூசாரி மற்றும் அவரின் மனைவி ஆகியோரின் தலை முடியை வெட்டிய ஊர் பஞ்சாயத்தார் - பாதிக்கப்பட்ட பூசாரி குடியாத்தம் காவல்நிலையத்தில் புகார்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஜிட்டபள்ளி கிராமத்தில் கோலார் தங்க வயலில் இருந்து இருபது ஆண்டுகளுக்கு முன் கூலி வேலைகளுக்காக குடும்பத்துடன் வந்து வசித்து வருபவர் மூர்த்தி கடந்த சில ஆண்டுகளாக பூசாரியாகயும் இருந்து வருகிறார் ஜிட்டப்பல்லி கிராமத்திற்கு 7 கழிப்பறைகளை கட்ட இடம் ஒதுக்கி அதில் வேலைகளை ஆரம்பித்தது அந்த இடத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்து அந்த இடத்தில் கழிவறை கட்ட தடை விதித்தார் இதற்கு காரணம் பூசாரி மூர்த்தி தான் என அந்த கிராமத்தில் ஒரு சாரார் அவரை பஞ்சாயத்தை கூட்டி ஊரை விட்டு காலி செய்ய வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பிறகு அவரையும் அவர் மனைவி மதியையும் அடித்து அவர்களின் தலைமுடியை வெட்டி வீசினர் இதை தட்டிக்கேட்ட பூசாரி மூர்த்தியின் மகளையும் கடுமையாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் இதனிடையே பஞ்சாயத்தார் பூசாரி மேல் வேலூர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ள நிலையில் மூர்த்தி தன்னை தாக்கியதாக பஞ்சாயத்தார் மீது குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரை பெற்றுக்கொண்ட குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பஞ்சாயத்தார் சாமியாரின் தலைமுடியை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Des : The reason why the priest did not come is that the priest was the head of the priest and his wife, who had cut his hair - the victim priest complained to the police station

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS