சென்னை, சூளையைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில், சேகர் என்பவர் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இந்த கட்டிடத்தை தான் வாங்கிவிட்டதாக சேகர் உரிமை கோரி வந்தார். இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, லோகநாதனின் தந்தை, கடையை தனக்கு விற்பனை செய்து விட்டதாகவும், ஆனால் பத்திரப் பதிவு செய்யவில்லை என்றும் சேகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.