திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அடுத்த கானமலை பகுதியை சேர்ந்தவர் காமராஜ். இவர் கடந்த 31ம் தேதி ஆந்திராவில் செம்மரம் கடத்தவந்ததாக கூறி ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரது உறவினருக்கு நேற்று முன்தினம் மாலை தெரிவிக்கப்பட்ட நிலையில், காமராஜின் உடல் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.