திருவண்ணாமலை திருவூடல் வீதியிலிருந்து கடலைக் கடை சந்திப்பு வரையிலான சாலையில், துணிக்கடை, மருந்துக்கடை, வணிக நிறுவனங்கள், காய்கறி மார்க்கெட் உட்பட பல கடைகள் உள்ளன. இந்நிலையில் இந்த சாலையை போக்குவரத்து போலீசார் ஒருவழிப்பதையாக மாற்றியுள்ளனர். இதனால் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், நேற்றிரவு 100க்கும் மேற்பட்ட வியபாரிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.